இதழியல் வெளியீட்டு கொள்கை
- கட்டுரை ஆய்வுமுறை என்பது மூன்று படிநிலைகளை கொண்ட இரட்டை மறை சக மதிப்பாய்வு நடைமுறைகளை கொண்டுள்ளது. இப்படிநிலைகளானது போதுமான நேரத்தினை கொண்டு ஆய்வு செய்யப்படும்.
- ஒரு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட பின் அது குறித்த எந்த ஒரு கோரிக்கையும் ஆய்வு முடிவுக்கு முன் ஏற்கப்படாது. கட்டுரையை ஏற்பது அல்லது நிராகரிப்பது என்பது இதழாசிரியர் குழுவின் தனிப்பட்ட முடிவாகும். இது குறித்த எந்த ஒரு கோரிக்கையும் ஏற்கப்படாது
- இதழாசிரியர் குழுவினால் கட்டுரையில் எதினும் மாற்றம் தேவைப்படின் அதனை கட்டுரை ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி அதனை மாற்றம் செய்யலாம்
- ஆய்வு நடைமுறையானது கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட குறிப்புகளுக்கான சரியான ஆதாரங்களை கேட்டு கட்டுரை ஆசிரியரை அணுகலாம்.
- கட்டுரையை ஏற்க அல்லது நிராகரிக்க இதழாசிரியர் குழு அல்லது பதிப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
ஆய்வு படிநிலைகள்
படிநிலை 1 – ஆய்வுக் கட்டுரையின் கருத்துத் களவு நிலை மற்றும் உரை ஒற்றுமைச் சரிபார்ப்பு, சமர்ப்பிப்பு விதிகள் சரிபார்ப்பு, இலக்கணம் மற்றும் குறிப்புப் பிரிவுச் சரிபார்ப்புகளைச் சரிபார்க்க, இதழின் இணை ஆசிரியர்களால் இந்தக் கட்டம் கையாளப்படும். எந்தவொரு ஆசிரியர், சமர்ப்பிப்பு விதிகளைத் தொகுக்கத் தவறி இருந்தால், அப்பிழைகளை நீக்குவதற்கு அக்கட்டுரை, அதன் ஆசிரியர்களுக்குத் திருப்பி அனுப்பப்படும் (நிராகரிக்கப்படாமல் இருக்கலாம்). படிநிலை 1ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண், அதாவது உதாரணமாக V2I54 மூலம் அடையாளப்படுத்தப்படும். ஆசிரியரின் விவரங்கள் பதிப்பாளருக்கு மட்டுமே தெரியும். இணை ஆசிரியர்களால் கட்டுரையிலிருந்து அனைத்து அடையாள விவரங்களையும் அகற்றுவார்கள்.
படிநிலை 2 – படிநிலை 1 லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இரட்டை மறை – சக மதிப்பாய்வு முறையில் சீரற்ற வகையில் இதழாசிரியர்கள் குழு உறுப்பினர்களிடையே பகிரப்படும். தலைமை இதழாசிரியர் உட்பட குறைந்தபட்சம் ஐந்து இதழாசிரியர்களைக் கொண்டு கட்டுரை மதிப்பீடு செய்யப்படும். கட்டுரையை குறிக்கும் அளவுகோலைக் கொண்டு அக்கட்டுரையின் தரமானது மதிப்பீடு செய்யப்படும்.
மதிப்பீடுஅளவுகோல்
- “சரியான மற்றும் தெளிவான பகுப்பாய்வு – 15 மதிப்பெண்கள்
- ஆராய்ச்சியின் அளவு மற்றும் பயன்பாடு – 10 மதிப்பெண்கள்
- தற்கால சமூக பிரதிபலிப்புகள் – 15 மதிப்பெண்கள்
- புதிய சிந்தனைகள் – 15 மதிப்பெண்கள்
- ஆராய்ச்சியின் வலிமை – 15 மதிப்பெண்கள்
- தெளிவு மற்றும் அமைப்பு – 10 மதிப்பெண்கள்
- இலக்கண நடை – 10 மதிப்பெண்கள்
- சரியான வடிவம் மற்றும் மேற்கோள்கள் – 10 மதிப்பெண்கள்
- மொத்தம் – 100 மதிப்பெண்கள்.
நிலை 2 இல் அந்தக் கட்டுரை குறைந்தபட்சம் 80% (ஒட்டுமொத்த இதழாசிரியர்களின் மதிப்பெண்கள்) மதிப்பெண்களைப் பெறும் போது, அந்த ஆய்வுக் கட்டுரை நிலை 3 க்கு தேர்ந்தெடுக்கப்படும்.
படிநிலை 3 – இந்த நிலையானது முழுமையாக தலைமை இதழாசிரியாரின் முடிவினை கொண்டுள்ளது. தலைமை இதழாசிரியர் முழுமையாக படிநிலை 2 ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஆய்வு செய்வார். இன்நிலையில் தலைமை இதழாசிரியாரின் முடிவே இறுதியானது. தலைமை இதழாசிரியர் இறுதி செய்த கட்டுரைகள் பதிபாளராள் வெளியிடப்படும்.